போபால்
தேர்தல் ஆணையம் ரஃபேல் விவகாரம் உள்ளிட்ட ஆறு காங்கிரஸ் பிரசார வீடியோக்களுக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரத்தில் ஒரு கட்டமாக வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையம் தனது அனுமதி இன்றி வீடியோக்களை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டதால் கட்சிகள் ஆணையத்தின் அனுமதியை கோரி உள்ளன.
அவ்வகையில் போபால் மாநில காங்கிரஸ் அளித்த வீடியோக்களில் ஆறு விடியோக்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க மறுத்துள்ளது, இந்த ஆறு வீடியோக்களில் ஒன்று ரஃபேல் விவகாரம் பற்றியதாகும். ரஃபேல் விவகாரம் குறித்து நீதிமன்ற வழக்கு உள்ளதால் இந்த வீடியோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் பீகார் மாநில மீடியா பிரிவு தலைவர் ஷோபா ஒஜா இந்த வீடியோவில் வழக்கு தொடர்பாக எதுவும் கூறவில்லை என தெரிவித்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீடியோவில் மாற்றுத் திறனாளி குறித்து கூறப்பட்டதால் அந்த வீடியோவுக்கு அனுமதி அளிக்கவில்லை.
அது மட்டுமின்றி காங்கிரஸ் கொடியான மூன்று நிற திரவங்கள் ஒரு சிரிஞ்சில் உள்ளதால் இன்னொரு வீடியோவுக்கு அனுமதி அளிக்க மறுக்கப்பட்டுள்ளது. இது தேசியக் கொடியை அவமதிப்பதாக காரணம் கூறப்ப்பட்டது.
இது குறித்து ஷோபா ஒசா, “பல காரணங்கள் கூறி எங்களுடைய ஆறு பிரசார வீடியோக்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க மறுத்துள்ள்து. இதில் அனுமதி மறுக்கும் அளவுக்கு ஆட்சேபகரமாக எதுவும் கிடையாது. இதனால் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அழுத்தத்தினால் அனுமதி அளிக்க மறுத்துள்ளதாக எங்களுக்கு தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.