டெல்லி
டெல்லியில் நேற்றிரவு புழுதிப்புயல் வீசியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது

நேற்று டெல்லியின் பல பகுதிகளில் புழுதி புயல் ஏற்பட்டு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. எனவே, பொது மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தற்காலிக அடிப்படையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இதன்படி, பவானா, நரேலா, ஜகாங்கீர்புரி, சிவில் லைன்ஸ், சக்தி நகர், மாடல் டவுன், வசீராபாத், திர்பூர் மற்றும் புராரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இன்றி மக்கள் பாதிப்படைந்தனர்.
இந்த புழுதி புயலை தொடர்ந்து, பலத்த காற்றும் மழையும் சேர்ந்து கொண்டதால், மரங்கள், மரக்கிளைகள் பல்வேறு இடங்களில் முறிந்து விழுந்தன. இதனா; மின் இணைப்பு வயர்கள் மரங்கள் சாய்ந்ய்து அவை சாலையிலும், வாகனங்கள் மீதும் விழுந்து பாதிப்பு ஏற்படுத்தின. இதனால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து அதனுடன், புழுதி புயல் மற்றும் பலத்த காற்று வீசியதன் தொடர்ச்சியாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பல நாட்களாக 40 டிகிரி செல்சியசுக்கு கூடுதலாக வெப்பநிலை அதிகரித்து இருந்த சூழலில், மழையால் நேற்று வெப்பம் தணிந்து பல்வேறு பகுதிகளிலும் குளிர்ச்சி ஏற்பட்டது.