ஜோகன்னஸ்பர்க்:
கிழக்கு ஆப்பிரிக்காவின் மோசாம்பிக் நாட்டில் மழை பெய்து வருகிறது. மபுடோ நகரின் புறநகர் பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது.
பல ஆண்டுகளாக கொட்டப்படும் குப்பைகள் இங்கு மலை போல் குவிந்து கிடக்கிறது. மழை காரணமாக குப்பை மேடு திடீரென சரிந்து விழுந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். 17 பேர் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. குப்பை குவியலில் மேலும் சிலர் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது.