வாஷிங்டன்: ‘வணிகம் செய்வதன் எளிமை’ அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள தரவை மாற்றுவதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த அறிக்கையை வெளியிடுவதை உலக வங்கி நிறுத்தி வைத்துள்ளது.
இதுதொடர்பாக உலக வங்கியின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ‘வணிகம் செய்வதன் எளிமை’ 2018 மற்றும் 2020 அறிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட தரவு மாற்றங்களில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை முறையே அக்டோபர் 2017 மற்றும் அக்டோபர் 2019ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன.
ஆனால், ‘வணிகம் செய்தல்’ ஆய்வுமுறையின்படி, தரவில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களில் முறைகேடுகள் நடைபெற்றுது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தரவு மாற்ற முறைகேடுகளால், நாடுகளின் அதிகாரிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டார்கள் என்ற விஷயம் தொடர்பாக உலக வங்கியின் நிர்வாகக் குழு இயக்குநர்கள் கூடி கலந்தாலசைனை செய்தார்கள்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டு வருவதால், ‘வணிகம் செய்தல்’ அறிக்கை வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.