அந்தமான்:
இன்று காலை அந்தமான் கடலில் 4.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவிதமான உயிர் சேதமொ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அந்த மான் மற்றும் நிக்கோபார் தீவு அறிவித்துள்ளது.
இதைப்பற்றி நிலநடுக்க இயல் தேசியமயம் கூறியுள்ளதாவது: அந்தமானில் காலை 5:19 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயரிலிருந்து 71- கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 150 கிலோ மீட்டர் ஆழம் கொண்டதாக இருந்தது.
இதனால் எந்த உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை, இதேபோல் நேற்று இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில், 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.