சூரத்: குஜராத் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில் இன்று மாலை 3.39 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டரில் 4.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது.
நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் பொருளிழப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Patrikai.com official YouTube Channel