திக்லிபூர்: அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா அந்தமான் நிகோபர் தீவையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந் நிலையில், அந்தமான் நிகோபர் தீவில் திக்லிபூர் அருகே இன்று காலை 9 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பொருட்சேதமோ, உயிரிழப்போ ஏற்பட்டதா என்ற விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
Patrikai.com official YouTube Channel