ஈரானின் செம்னான் மாகாணத்தின் அராடனின் பகுதியில் அக்டோபர் 5ம் தேதி மாலை நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நில அதிர்வு அண்டை நாடான ஆர்மீனியாவிலும் உணரப்பட்டதாகவும் அது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவானதாகவும் தகவல் பரவியது.
இந்த தகவலை மறுத்துள்ள புவியியல் ஆய்வாளர்கள் அராடன் பாலைவனப் பகுதி அணுஆயுத சோதனை நடத்த ஏற்ற இடமல்ல என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நில அதிர்வின் மையப்புள்ளி பூமிக்கு 10 கிலோ மீட்டர் அடியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அணுஆயுத சோதனையை இந்த மணற்பாங்கான இடத்தில் அதிலும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நடத்த சாத்தியம் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ஈரான் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கியதாகக் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல் என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.