அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவில் 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்பிரிக்க நாட்டின் கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 1600 கிலோமீட்டர் தூரத்திலும், பிரேசில் நாட்டு கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 2250 கிலோ மீட்டர் தூரத்திலும், அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவு. இந்த தீவு முழுவதும் எரிமலைகள் சூழ்ந்து காணப்படும்.
இந்த அசென்ஷன் தீவின் வடமேற்கே சுமார் 975 கிலோமீட்டர் தூரத்தில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏதும் உருவாகவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேத விவரங்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை.

அசென்சன் தீவு தெற்கு அட்லாண்டிக் கடலில் ஆபிரிக்காவின் மேற்க்குக் கரையிலிருந்து சுமார் 1000 மைல் (1600 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகாவைச் சார்ந்த பகுதியாகும். இது செயிண்ட். எலனாவில் இருந்து வடமேற்குத் திசையில் 800 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இத்தீவு இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்ப்பு (Ascension) திருவிழா நாளில் கண்டுபிடிக்கப்பட்டதனால் இத்தீவிற்கு இப்பெயர் வழங்கிற்று.
Patrikai.com official YouTube Channel