டில்லி
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் கடும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் நேற்று இரவு 11.29 மணி அளவில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் தாக்கியதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்திருந்தது.
நேற்று இரவு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தலைநகர் டில்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வலுவான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
China, earthquake, Delhi, earth tremor ,