கிரிக்கெட்: 2016ம் ஆண்டின் சிறந்த வீரராக அஸ்வின் தேர்வு

Must read

தர்மசாலா:

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2016ம் ஆண்டு சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு ‘சர் கார்பீல்டு சோபர்ஸ்’ கோப்பை வழங்கப்பட்டது.

அதோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் 2016ம் ஆண்டின் சிறந்த வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி வீரர்களில் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்த படியாக இரு விருதுகளை ஒரே ஆண்டில் வாங்கிய இந்திய அணியின் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார்.

இதற்கான விருதுகளை இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.

More articles

Latest article