சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துத்துக்கு வருபவா்களுக்கும், மலை வாசஸ்தலங்களுக்கு செல்பவா்களுக்கும் இணையதளப் பதிவு (இ-ரிஜிஸ்ட்ரேசன்) கட்டாயம் என தமிழகஅரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடர்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் எழில்நதி என்பவா் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மத்திய அரசு இ-பாஸ் முறையான இணையதள அனுமதிச்சீட்டு பெறும் முறையை ரத்து செய்தது. ஆனால் தமிழகத்தில், இன்னும் அந்த நடைமுறை தொடர்கிறது. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்களில் அமைந்துள்ள சுற்றுலாப்பகுதிகளுக்கு செல்ல சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகள் மாவட்ட ஆட்சியா்களிடம் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்றைய விசாரணையின்போது, ஆஜரான தமிழகஅரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற வேண்டியது கிடையாது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துத்துக்கு வரும் பயணிகளுக்கும், மலைப்பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கும் இணையதளப் பதிவு (இ-ரிஜிஸ்ட்ரேசன்) கட்டாயம் என்று தெரிவித்தார்.
கொரோனா நோய்த் தொற்றுப் பரவைலைத் தடுக்கும் வகையில் இணையதளப் பதிவில், பயணிகளின் முகவரி, தொடா்பு எண், உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் பெறப்படும். இ-ரிஜிஸ்ட்ரேசன் பதிவு செய்பவா்களுக்கு தானியங்கி முறையில் அனுமதி வழங்கப்படும் இது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே என கூறினார்.
அரசின் கருத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
[youtube-feed feed=1]