மின்ஊடகங்களில் உள்ள மின்னணு தரவுகள் அந்ததந்த நாடுகளில் உள்ள தரவு மையத்தில்தான் சேமித்து பாதுகாக்க வேண்டும் என்ற வளரும் நாடுகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும்,’ என்று இந்தியா சார்பில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 நாடுகளின் 2 நாள் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில், வர்த்தகம் மற்றும் மின்னணு தரவுகள் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டது. வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு கூகுள், மாஸ்டர் கார்டு, விசா, அமேசான் போன்ற அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் டெபிட் கார்டுகள், கிரடிட் கார்டுகள் ஆகியவை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிறுவனங்களில் தரவுகளை இந்தியாவில்தான் சேமிக்கவேண்டும் என்று இந்தியா வாதித்து வருகிறது . ஆனால் மாஸ்டர் கார்டு, விசா போன்ற நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே நிருபர்களிடம் கூறியதாவது: மின்னணு ஊடகங்கள் பாதுகாப்பது என்பது முக்கியப்பிரச்னை. வெளிநாட்டில் பாதுகாப்பாக வைப்பதற்கு எந்த சர்வதேச விதிமுறைகளும் இல்லை. உள்நாட்டில் உள்ள தரவு மையங்களின் சேமித்து வைப்பதுதான் பாதுகாப்பானது எனவும, தனிநபர் உரிமையை பாதுகாப்பதும் அவசியம் என்று டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தாக கூறினார்
-செல்வமுரளி