கொச்சி: கேரள மாநிலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து கவலைத்தெரிவித்துள்ள கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

கேரள கத்தோலிக்க ஆயர்கள் கவுன்சில் கூடமமடத ஆகஸ்ட் 2-6 வரை நடைபெற்றது. இதில்,  சமூகம் தொடர்பான பல்வேறு விஷயங்களை கவுன்சில் விவாதித்தது. மேலும் சமூக செயற்பாட்டாளர்  ஸ்டான் சுவாமியின் மரணம் குறித்து கவலையை எழுப்பியது.

இதையடுத்து, கேரள கத்தோலிக்க ஆயர்கள் கவுன்சில் (KCBC)  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கிறிஸ்தவ சமூகத்தின் மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரியது என்று கூறி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்தது.

இந்தியாவில் 135 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை இருப்பதால், நாமிருவர் நமக்கு இருவர் திட்டம் அமலில் உள்ளது. தற்போதைய நவீன யுகத்தில் ஒரு குழந்தையே போதும் என இளம் தம்பதிகள் குழந்தை பெறுவதை நிறுத்திக்கொள்கின்றனர். ஆனால், கேரளா கத்தோலிக்க பிஷப்கள் ஒவ்வொரு கத்தோலிக்க தம்பதியும் 5க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் வெளியிட்டுள்ள   செய்திக்குறிப்பில், கிறிஸ்துவ சமூகத்தின் மக்கள் தொகை 1950 களில் 24.6 சதவீதமாக இருந்தது. தற்போது அது  17.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. “கிறிஸ்தவர்களிடையே பிறப்பு விகிதம்  குறைந்து வருவது, ஆபத்தானது மற்றும் கவலைக்குரியது என்று தெரிவித்து உள்ளது.

தற்போது, ​​மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் பிறப்பு விகிதம் .8 சதவிகிதம், ஆக மிகக் குறைவாக உள்ளது என்று கவலை தெரிவித்துள்ளதுடன்,   பல்வேறு மறைமாவட்டங்கள் அதிக குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. அதனால் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாத இறுதியில், சிரோ-மலபார் தேவாலயத்தின் பாலா மறைமாவட்டத்தின் கீழ் உள்ள அப்போஸ்தல  குடும்பம், 2000-க்குப் பிறகு திருமணமான மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற தம்பதிகளுக்கு மாதந்தோறும் ரூ .1,500 நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க தம்பதிகள் ஓவ்வொருவரும் 5 குழந்தைகள் பெற வேண்டும்! கிறிஸ்தவ ஆயர் பரபரப்பு அறிவிப்பு…

 

[youtube-feed feed=1]