சென்னை: முன்னாள் அதிமுக எஸ்.பி.வேலுமணியின் கோவை வீடு உள்பட அவருக்கு சொந்தமா இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2வது முறையாக நடத்திய சோதனை சுமார் 28மணி நேரம் நீடித்தது. இந்த சோதனையின்போது, பல ஆவணங்கள் சிக்கியதாக லஞ்சஒழிப்பு துறை தெரிவித்து உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்துக்கு அதிக மாக 3,928 சதவீதம், அதாவது ரூ.51.09 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதன்பேரில் நேற்று வேலுமணிக்கு சொந்தமான வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அன்படி, எஸ்.பி. வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீடு உள்ளிட்ட 41 இடங்களிலும், செனனையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்களிலும், திருப்பத்தூரில் 2 இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 1 இடத்திலும், கிருஷ்ணகிரியில் 1 இடத்திலும் என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 41 இடங்கள், சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள், திருப்பத்தூரில் 2 இடங்கள் ,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம் , வெளி மாநிலத்தில் ஒரு இடம் என 58 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சுமார் 28 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சென்னை ஆதம்பாக்கம் இ.பி. காலனி 3ஆவது தெருவில் பனகல் பில்டிங்கில் உள்ள ஊரக வளர்ச்சி துறை சூப்பிரண்டு பொறியாளர் சரவணக்குமார் வீட்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலுமணியின் உறவினரான சேலம் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில், 14 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள ஏ.வி.ஆர் சுவர்ண மகாலில் நடத்திய சோதனையில் வருமான வரி சம்பந்தமாக 6 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேட்டூர் அடுத்த பெட்டனேரியில் கண்காணிப்பு பொறியாளர் சரவணகுமார் வீட்டில் நடைபெற்ற 10 மணி நேரத்திற்கு மேலான சோதனையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நான்கு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்ததாக முதல்தகவல் அறிக்கை பதிவு….