டில்லி:
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென புழுதி புயல் வீசியது. இதில் உத்தரபிரதேசத்தில் 73 பேரும், ராஜஸ்தானில் 35 பேரும், தெலங்கானாவில் 8 பேரும், உத்தரகாண்டில் 6 பேரும், பஞ்சாப்பில் 2 பேரும் இறந்தனர்.
இந்தநிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் புழுதி புயல் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால் பொது மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.