சென்னை: வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கு வரும் பக்தர்களக்கு முக கவசம், சமூக இடைவெளி கட்டாயம் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாடங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாத நிலையில், வைகுண்ட ஏகாதசிக்கு கட்டப்பாடு விதித்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, முககவசம், சமூக இடைவெளி போன்றவை நடைமுறையில் இருப்பதால் மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், பக்தர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் கேட்டுக் கொண்டார்.
வைகுண்ட ஏகாதசி நாளில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சுழற்சி முறையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும், திராவிட மாடல் ஆட்சியில் கோவில்களில் தீண்டாமை நிச்சயம் இருக்காது என்றும் தீண்டாமை என்பது இந்த ஆட்சியில் தீண்டாமலே சென்றுவிடும் என்றும் கூறினார்.
தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாடங்களுக்கு முக்கவசம், சமூக இடைவெளி என எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்காத நிலையில், வைகுண்ட ஏகாதசிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.