ஜெய்ப்பூர்

ஐ பி எல் போட்டிகளிலும் காவல்காரர் திருடன் ஆனார் என்னும் கோஷம் எழுப்புவது தொடரத் தொடங்கி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “சௌக்கிதார் சோர் ஹை” (காவல்காரர் திருடன் ஆனார்) என பிரதமர் மோடியை குறித்து கூறி வந்தார். தன்னை நாட்டின் காவல்காரர் என கூறி பிரதமர் பதவியை வென்ற மோடி அதன் பிறகு ரஃபேல் பேரத்தில் ஊழல் செய்தால் நாட்டை கொள்ளை அடித்துள்ளார் என்னும் பொருள் வரும் படி ராகுல் இந்த கோஷத்தை தொடங்கினார். அது மிகவும் பிரபலமாகியது.

இந்தர்கு பதில் அளிப்பது போல் மோடி “மைன் பி சவுக்கிதார்” (நானும் காவல்காரர் தான்) என அடுத்த ஹேஷ்டாக்கை கையில் எடுத்தார். அதுவும் பிரபலமாகியது. மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க பாஜக ஆதரவாளர்கள், தொண்டர்கள், தலைவர்கள் என பலரும் பெயருக்கு முன்பு சௌக்கிதார் (காவல்காரர்) என டிவிட்டரில் பெயர் மாற்றம் செய்தனர்.

இதை பலரும் கேலி செய்ய தொடங்கினர். பாஜக பெண் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கணவர் “காலையில் கண் விழித்தேன். என் மனைவி காவல்காரி ஆகி விட்டார்” என டிவிட்டரில் பதிந்தார். பிரியங்கா உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் மோடி பணக்காரர்களுக்கு மட்டுமே காவல்காரர் கருத்து தெரிவித்தனர்.

தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் நேற்று முன் தினம் ராஜஸ்தான் ராயல் அணியும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியும் மோதின. அந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஆம் ஓவர் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு கூடி இருந்த ரசிகர்கள் சிலர் “சௌக்கிதார் சோர் ஹை” என கோஷமிட்டனர்.

 

 

அந்த கோஷம் திடல் எங்கும் பரவியது. அது வீடியோ எடுக்கபட்டு சமூக வலை தளங்களில் பதியப்பட்டது.

அதை காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் மறு பதிவு இட்டு வைரலாக்கி உள்ளனர்.