குண்டூர்

ந்திராவில் குண்டூர் மருத்துவமனை ஒன்றில் மூளை அறுவை சிகிச்சை நேரத்தில் மருத்துவர்கள் பாகுபலி படத்தை அந்த நோயாளிக்கு காட்டி உள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் வினயா குமாரி (வயது 43) இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதால் சிகிச்சைக்கு துளசி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருடைய மூளையில் ஒரு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை நடக்கும் போது அவசியம் நோயாளி விழிப்பு நிலையில் இருந்தாக வேண்டும்.  அதனால் நரம்பியல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் மற்றும் அவர் குழுவினர் வினயா குமாரிக்கு லாப்டாப்பில் ”பாகுபலி” திரைப்படத்தை போட்டு காட்டி உள்ளனர்.  அவர் அதை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்று வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதற்கு மருத்துவர் குழுவினர் ”பாகுபலி ப்ரைன் சர்ஜரி” என பெயரிட்டு உள்ளனர்.

ஸ்ரீனிவாஸ் இது குறித்து, “நோயாளி அவசியம் விழித்திருக்க வேண்டும் என்பதால் பாகுபலி படத்தை போட்டுக் காட்டினோம்.  வினயா பயப்படாமல் பாகுபலியை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.  ஒரு சில பாடல்களுக்கு ஹம்மிங் செய்தார்” என கூறினார்.  தற்போது முழுமையாக குணமடைந்து வினயா வீடு திரும்பி உள்ளார்.  அவர், “அறுவை சிகிச்சை ஒன்றரை மணி நேரத்திலேயே முடிந்து விட்டது.  இன்னும் அதிக நேரம் நடந்திருந்தால் முழுப்படத்தையும் பார்த்திருப்பேன்.” என கூறினார்.

[youtube https://www.youtube.com/watch?v=3UifjtH7o6Y]