சென்னை
சென்னையில் நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவில்க் கும்பாபிஷேகத்தில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துக் கொண்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஜெண்டில்மேன், முதல்வன், உள்ளிட்ட பல படங்கள் வெற்றி வாகை சூடி உள்ளன. இவர் ஒரு தீவிர ஆன்ச்ஜனேயர் பக்தர் ஆவார். சென்னை போரூர் கிரகம் பாக்கத்தில் அர்ஜூன் ஒரு ஆஞ்சநேயர் கோவிலைக் கட்டி உள்ளார்.
இந்த கோவிலில் 180 டன் எடையில் ஆஞ்சனேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இது குறித்து அர்ஜுன், “இது எனது 17 வருடக் கனவு. இத்தனை நாட்கள் ஆனதைவிட எனக்கு இவை அளித்த அனுபவங்கள் முக்கியமானவை. இந்த முயற்சிக்கும், என் தாய், என் மனைவ் மற்றும் மகள்கள் என குடும்பமே உறுதுணையாக இருந்தது” எனக் கூறி உள்ளார்.
இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்துள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு ஆஞ்சநேயரைத் தரிசனம் செய்தார். கடந்த வாரம் நடிகர் அர்ஜுன் மு க ஸ்டாலினை இந்த விழாவுக்கு நேரில் சென்று அழைத்ததாகக் கூறப்படுகிறது.