தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன், தன்னுடைய சொந்த செலவில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி இருக்கிறார்.
சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார். அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை நிர்மாணித்து உள்ளார். கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பதுபோன்று சிலையை வடித்து. 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் விசேஷ பூஜைகள் செய்து பெரிய கிரேன் மூலம் அந்த சிலை சாமி பீடத்தில் அமர்த்தப்பட்டது.
இன்று அந்த ஆஞ்சநேயர் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்த அவர், தனது யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பையும் செய்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவியார் திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் பெற்றார்.