திருச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு கிளி மாலையுடன் ரத்ன அங்கி சூடி பெருமாள் வலம் வந்தார்.

மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் கோவில் முதன்மையானது ஆகும்.  இங்கு வைகுண்ட ஏகாதசி விழா 20 நாட்கள் கொண்டாடப்படும்.   அதன்படி இந்த ஆண்டு கொண்டாட்டம் கடந்த 14 ஆம், தேதி தொடங்கியது.  நேற்று பத்தாம் நாளை முன்னிட்டு மோகினி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

இன்று வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.  இதனை முன்னிட்டு மூலவர் ரங்கநாதருக்கு முத்தங்கி மற்றும் நம்பெருமாளுக்கு ரத்ன அங்கி சார்த்தப்பட்டது.   நம்பெருமாள் அதிகாலை 3.30 ,மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து கிளம்பி 4.45க்கு சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளினார்.

 

இன்று காலை 8 மணிக்கு மேல் முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இரவு 8 மணியுடன் இந்த சேவை நிறுத்தப்பட உள்ளது.  வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வரை மூலவர் முத்தங்கி சேவை மற்றும் சொர்க்க வாசல் திறப்பு ஆகியவற்றுக்கும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த முன்பதிவைப் பக்தர்கள் heeps://srirangam.org என்னும் இணைய தளத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும்.  கட்டணமில்லா தரிசனம் மற்றும் விரைவு வழி தரிசனம் என இரண்டுக்கும் முன்பதிவு கட்டாயமாகும்.  பதிவு செய்த நேரத்துக்கு 30 நிமிடங்கள் முன்பு கோவிலுக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆயினும் பக்தர்கள் இங்கு அதிகாலை முதலே காத்து இருக்கின்றனர்.

நமது வாச்கர்களுக்காக சொர்க்க வாசல் திறப்பு வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=YMKavm1U6es]