டில்லி

பொருளாதார வளர்ச்சி நிலையற்று காணப்படுவதால் இதுவரை 13.5 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்தியாவில் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளதாக சென்ற வருடத்தில் இருந்தே பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் உலகெங்கும் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்குதல் காரணமாக பல தொழில்களும் வர்த்தகங்களும் அடியோடு மூடப்பட்ட்டு உலக அளவில் நிலையற்ற ஒரு நிலையில் பொருளாதாரம் இருந்து வருகிறது.  இதன் தாக்கம் இந்தியாவில் அதிகம் உள்ளதாக வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் சிறிது சிறிதாக தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. ஆயினும் பொருளாதார நிலை நிலையற்று காணப்படுகிறது.  எனவே பல நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களை நியமனம் செய்யாமல் தற்காலிக ஊழியர்கள் நியமனம் மட்டும் நடந்து வருகிறது.   இதனால் 13.5 கோடி நிரந்தர பணியாளர்கள் பணி இழந்துள்ளனர். இதனால் வேலை இன்மை 35% அதிகரித்துள்ளது.

குவெஸ் கார்பரேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி சூரஜ் மொராஜி, “தற்போதுள்ள நிலையில் பலரும் தற்காலிக ஊழியர்களை நியமனம் செய்வதையே விரும்புகின்றனர்.  தற்போதுள்ள நிலையற்ற பொருளாதார நிலையில் நிரந்தர பணியாளர்களை நியமிப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும் என தொழிலதிபர்கள் அஞ்சுவதே முக்கிய காரணமாகும்.   அதே வேளையில் அந்தந்த துறையில் சிறப்பு தகுதி பெற்றோருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் அதிக சிரமம் இருப்பதில்;லை” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தற்காலிக விற்பனை ஊழியர்கள் தேவைஒ அதிகரித்துள்ளது.   அத்துடன் பல நிறுவனங்களில் இவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுத்து வருகின்றனர்.    மேலும் பல நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி  புரிவதால் அலுவலக பணியாளர்கள் தேவை மிகவும் குறைந்துள்ளது.   தற்போது விழாக்கால விற்பனை மட்டுமே அதிகரிக்கும் என எண்ணுவதால் பல நிறுவனங்கள் அதற்கேற்ப தற்காலிக ப்ணியாளர்களை நியமிக்கின்றன.