ஸ்ரீநகர்
இதுவரை காணாதா அளவுக்குக் காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த வருடம் குளிர் காலம் நாடெங்கும் கடுமையாக உள்ளது. இதனால் எப்போதும் குளிராக உள்ள காஷ்மீரில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இங்குள்ள முக்கிய் நகரங்களான ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் 3 டிகிரியில் இருந்து மைனஸ் 6 டிகிரி வரை குளிர் உள்ளது.
இது இந்த பருவத்தில் எப்போதும் உள்ள குளிரை விட மிக கடுமையானது என வானிலை ஆய்வு மையம் கவலை தெரிவித்துள்ளது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் குல்மார்க் பகுதியில் குளிர் மைனஸ் 11 டிகிரியாக பதிவாகி உள்ளது. இது காஷ்மீர் மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
உலகப் புகழ் பெற்ற டால் ஏரியில் உள்ள நீரில் பெரும்பாலான பகுதி பனியாக உறைந்துள்ளது. கடும் குளிர் காரணமாக மக்களால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கல் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.