டில்லி

ந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குக் கடத்தி வரப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சில மாநிலங்களில் வரலாறு காணாத உச்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டி உள்ளது.   இதற்கு ஏற்றாற்போல் டீசல் விலையும் ஏறி வருகிறது.  எனவே மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எரிபொருள் விலை உயர்வையொட்டி தமிழக லாரி உரிமையாளர்கள் மார்ச் 15 முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

அதே வேளையில் அண்டை நாடான நேபாள நாட்டில் பெட்ரோல் விலை மிகவும் குறைவாக உள்ளது.  இங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.22 ஆக உள்ளது.  எனவே கடந்த சில நாட்களாக நேபாள நாட்டில் இருந்து பீகார் எல்லையில் உள்ள அராரியா, கிஷன்கஞ்ச் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர் எல்லை தாண்டி நேபாளம் சென்று அங்கிருந்து பெட்ரோலை கடத்தி வர தொடங்கி உள்ளனர்.

பீகாரின்  அராரியா பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.,93.50 ஆகும்.   எனவே நேபாளத்திலிருந்து கடத்தி எடுத்து வரும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.70.62 எனச் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது.   அதாவது நேபாளத்துக்கு இந்தியாவில் இருந்து பெட்ரோல் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதே பெட்ரோல் அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டு இந்திய விலையை விட மலிவாக விற்கப்படுகிறது.