கால்நடைகளுக்கு ‘பீர்…. இங்கிலாந்தின் லாக் டவுன் வினோதம்’..
கொரோனா பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ள நாடுகளில் ஒன்று, இங்கிலாந்து.
கொரோனா காரணமாக அந்த நாட்டில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஜூலை மாதம் 4 ஆம் தேதி தான் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள கேளிக்கை விடுதிகளில் (பஃப்) அதிகம் விற்பனையாவது பீர் பானங்கள் தான்.
இதனால் கேளிக்கை விடுதிகள் அளவுக்கு அதிகமாக பீர் பாட்டில்களை இருப்பு வைத்திருந்தன.
ஊரடங்கு காரணமாக எல்லாமே வேஸ்ட்.
எவ்வளவு தெரியுமா?
’’70 லட்சம் சிறிய பீர் பாட்டில்கள் ’பஃப்’ களில் வீணாகி விட்டதாக ‘பிரிட்டிஷ் பீர் மற்றும் பஃப் அசோசியேஷன்’ வருத்தம் தோய்ந்த குரலில் தெரிவித்துள்ளது.
அந்த பீர் பாட்டில்களை கால்நடைகளுக்கு உணவாகவும், உரம் தயாரிக்கவும் கொடுக்க பீர் & பஃப் அசோசியேஷன் முடிவு செய்துள்ளது.
‘’கொரோனாவால் வேளாண் தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு எங்களால் ஆன உதவி’’ என்று அந்த அசோசியேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
– ஏழுமலை வெங்கடேசன்