திருப்பதி

ட்டு நெய்யில் கலப்படத்தின் காரணமாக திருப்பதியில் காவல் சட்டப்பிரிவு 30 அமலாக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 18 ஆம் தேதியன்று ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, லட்டு பிரசாத விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடப்போவதாக அறிவித்து தன்படி ஜெகன் மோகன் ரெட்டி நாளை திருப்பதி செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள்  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள் அதிகளவில் திருமலைக்கு தரிசனம் செய்ய வருகை தருவதால் பாதுகாப்பு கருதி, மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு 30-ஐ வரும் 24 வரை அமல்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பாராயுடு உத்தரவிட்டுள்ளார். அனுமதி பெறாமல் தடையை மீறி பேரணி, பொதுக் கூட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.