திருவனந்தபுரம்

ணி நீக்கத்தால் வெளிநாடுகளில் வசிக்கும் 56000 கேரள மக்கள் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்க்பட்டது.  ஆயினும் பாதிப்பு கட்டுக்குள் வராததால் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் விடுமுறை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்திய வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் பணி புரியும் நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை.  இதைப்  போல் வெளிநாடுகளில் பணி இழந்த இந்தியர்கள் நாடு திரும்ப முடியவில்லை.

இவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கேரள அரசின் நோர்கா துறைக்கு (Department of Non-Resident Keralite Affairs)  பலரும் விண்ணப்பம் செய்து வருகின்றனர்  இது குறித்து கேரள முதல்வர் பிணராயி விஜயன், “சென்ற ஞாயிறு முதல் நேற்று வரை  நோர்காவுக்கு 3,20,463 வெளிநாடு வாழ் கேரள மக்கள் நாடு திரும்ப வேண்டும் எனப் பதிந்துள்ளனர்.

இவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி நீக்க அச்சம் மற்றும் விடுமுறை முடிவு ஆகியவைக்ளுக்காக தாங்கள் வசிக்கும் நாட்டுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.   பணி புரியும் நாடு செல்ல விரும்புவோரின் குழந்தைகள் 9561 பேர் மற்றும் கர்ப்பிணி மனைவிகள் 9515 பேர் உள்ளிட்டோரும் நோர்காவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதைத் தவிர வெளிநாடு வாழ் கேரள மக்களில் 56,114 பேர் திரும்பி வர விண்ணப்ப்பித்துள்ளன்ர்.  இவர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் தற்போது வேலைவாய்ப்பை இழந்தவர்கள் ஆவார்கள்.   அத்துடன் 7276 மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்துள்ளதால் இந்தியாவுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். ” என தெரிவித்துள்ளார்.