க்ரா

க்ராவில் பெய்து வரும் கனமழையால் தாஜ்கமகால் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்ட்ள்ளது.

கடந்த 3 நாட்களாக ஆக்ராவில் கனமழை பெய்து வருவதால், நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த கனமழையால் தாஜ்மஹாலின் வளாகத்தில் உள்ள தோட்டம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் மேற்கூரைப் பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

இத் குறித்து ஆக்ரா வட்டத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல் :

“தாஜ் மஹாலின் பிரதான மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதை நாங்கள் கண்டோம். எனவே, டிரோன் கேமரா வைத்து மேற்கூரையை சோதனை செய்தோம். ஆனால், கசிவினால் எந்த சேதமும் ஏற்படவில்லை”

என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மோனிகா சர்மா,

 “தாஜ் மஹால் இந்தியாவின் பெருமை மிகுந்த நினைவுச் சின்னம். இதனை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். மேலும், சுற்றுலாத் துறையில் பணிபுரியும் 100 – க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் தாஜ் மஹால் மூலம் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளோம். எங்களுடைய ஒரே நம்பிக்கை இதுதான்”

என்று கூறியுள்ளார்.