ரியோ கிராண்டே டோ சுல்

னமழை மற்றும் வெள்ளத்தால் பிரேசில் நட்டில் 56 பேர் உயிரிழந்து 74 பேர் காணாமல் போய் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. எனவே அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது பிரேசிலில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தவிர 74 பேர் மாயமாகி உள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, மாகாணத்தில் மொத்தம் உள்ள 497 நகரங்களில் சுமார் 69 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மாகாணட்தின் பல பகுதிகளில் வெள்ளம் காரணமாக சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. எனவே போர்ட்டோ அலெக்ரேவில் உள்ள சர்வதேச விமான நிலையம் காலவறையின்றி மூடப்பட்டுள்ளது.