டெல்லி

டெல்லியில் வெப்ப அலை பாதிப்பால் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

 .

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடமாநிலங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக டெல்லியில் வெப்ப அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.  அதிகரித்து வரும் வெப்ப அலையின் தாக்கத்திற்கு மக்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ந்த வெப்ப அலை மற்றும் வெப்பம் தொடர்புடைய பாதிப்புகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் டெல்லி ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் ஆகிய மருத்துவமனைகளில் மொத்தம் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து வெப்ப தாக்கம் சார்ந்த பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன்படி, சப்தர்ஜங் மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 33 நோயாளிகள் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 13 பேர் மரணம் அடைந்து விட்டனர். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில், வெப்ப தாக்கத்திற்கு ஆளாகி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 22 நோயாளிகளில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டெல்லியின் முக்கிய தகன பகுதியான நிகாம்போத் காட் பகுதியில், தகனம் செய்யப்படும் உடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அவை வெப்ப தாக்கத்துடன் தொடர்புடையவையா? என்பது உறுதி செய்யப்பட முடியவில்லை. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.