வாஷிங்டன்
அமெரிக்கா தனது பங்குச் சந்தை சரிவின் காரணமாக மத்திய ரிசர்வ் வட்டி குறைந்த சதவிகிதமாக 0%ஐ அறிவித்துள்ளது.
கொரோனா வைரசால் உலகப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக் பங்குச் சந்தை கடுமையா சரிவைச் சந்தித்துள்ளது. இங்கிலாந்து வங்கி தந்து வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. சென்ற வாரம் அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தைக் குறைத்தது.
இந்நிலையில் பலரும் பங்குச் சந்தைக்குப் பதில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தாறுமாறாக எகிறியது. அதே வேளையில் இந்தியாவில் தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. அமெரிக்கப் பங்குச் சந்தை முதலீட்டை அதிகரிக்க அந்நாட்டு மத்திய ரிசர்வ் வங்கி பல முயற்சிகளைச் செய்து வருகிறது.
தற்போது தங்கம் விலை கடுமையாக ஏறுவதால் உலக சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாகத் தங்க மாற்றுப் பண்டுகளில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. எனவே அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 0% முதல் 0.25% ஆகக் குறைத்துள்ளது.
அத்துடன் $ 700 பில்லியன் அளவுக்குத் தங்க பாண்டுகள் வர்த்தகத்தினை அறிவித்துள்ளது. இதன் மூலம் அடகு கடன்கள் வட்டியில் 1% வரை குறையலாம் எனக் கூறப்படுகிறது. இதே நடவடிக்கை மற்ற நாடுகளும் தொடர்ந்தால் பங்குச சந்தையில் மாறுதல் இருக்கலாம் என நம்பப்படுகிறது.