ரோம்

டக்கு இத்தாலி பகுதியில் கொரோனா வைரஸ் ப்ர்வுதல் அதிகமாக உள்ளதால் அந்த பகுதி முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.  இந்த பாதிப்பு அதிகமாகக் காணப்படும் நாடுகளில் இத்தாலியும் ஒன்றாகும்.   குறிப்பாக இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியான லொம்பார்டி மாகாணத்தில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது.

இது குறித்து இத்தாலி பிரதமர் குளுச்போ காண்டே, “இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியான லொம்பார்டி மற்றும் சுற்று வடரப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளது.   இந்த வைரஸ் பரவாமல் தடுக்க இங்குள்ள தலைநகர் மிலன் உள்ளிட்ட 14 பகுதிகள் முழுவதுமாக அடைக்கப்படுகிறது.

இந்த பகுதிகளுக்கு செல்லவும் இங்குள்ளவர்கள் மற்ற இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   மேலும் இந்த பகுதிகளில் திருமணம் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளும் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இந்த பகுதிகளில் வசிக்கும் 1 கோடி பேருக்கு வைரஸ் பரவாமல் இருக்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.