மும்பை
பயணக் கட்டணம் குறைக்கப்பட்ட பிறகும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பலர் விமானப் பயணத்தை நிறுத்தி உள்ளனர்.
சாதாரணமாக மும்பையில் இருந்து வார இறுதியில் 24 மணி நேர இடைவெளியில் ஒருவர் லண்டன் சென்று வர பயணச்சீட்டு பதிவு செய்தால் குறைந்தது ரூ.80000 ஆகும். குறிப்பாக மார்ச் மாத காலத்தில் எந்த ஒரு விமானத்திலும் மும்பை லண்டன் சென்று வர பயணச்சீட்டு கடைசி நேரத்தில் கிடைக்காது. இதே நிலை அமெரிக்காவுக்கும் உண்டு.
ஆனால் தற்போதைய நிலையில் ஒருவர் நியூயார்க் சென்று விட்டு அடுத்த விமானத்தில் திரும்பி வர பதிவு செய்தால் பயணக்கட்டணம் ரூ.58000 ஆகும். லண்டன் என்றால் ரூ.46000 மட்டுமே ஆகிறது. கோவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் பயணம் செய்வதை நிறுத்தி உள்ளதே இதற்குக் காரணம் ஆகும்.
இதைப் போலவே துபாய், அபுதாபி போன்ற இடங்களுக்குச் செல்ல கடைசி நேரக் கட்டணம் ரூ.13200 ஆகி உள்ளது. முன்பு இதே ஊர்களுக்கான கட்டணம்ரூ.40000லிருந்து ரூ.42000 வரை இருந்தது இந்த கட்டணக் குறைப்பு ஏர் இந்தியா உள்ளிட்ட அனைத்து சர்வ தேச விமானச் சேவை நிறுவனங்களும் அமல்படுத்தி உள்ளன. இந்த கட்டணக் குறைப்பு பயணிகளைச் சிறிதும் ஈர்க்கவில்லை எனவே சொல்ல வேண்டும்.
நேற்று மும்பையில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் 56 பேர் பயணம் செய்ய முடியும். ஆனால் மொத்தம் அந்த விமானத்தில் 25 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர் நிறைய விமானச் சேவைகளுக்கு போதுமான ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டு அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே விமான சேவைகளை ரத்து செய்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என விமான நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன