சிங்கப்பூர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சிங்கப்பூர் மற்றும் லண்டனில் உள்ள பேஸ்புக் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய  கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளிலும் பரவி உலக மக்களைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.   இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   சுமார் 3200 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   உலக மக்கள் இதனால் கடும் பீதி அடைந்துள்ளனர்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சீனாவுக்கு டுத்த படியாக தென்கொரியா, இத்தாலி, ஈரான் நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது.   இந்தியாவில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் லண்டனில் செயல்பட்டு வரும் பேஸ்புக் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள பேஸ்புக் நிறுவன அலுவலகத்தில் பணி  புரியும் ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  அவர் சமீபத்தில் லண்டன் பேஸ்புக் அலுவலகத்துக்கு சென்று வந்துள்ளார். ஆகவே இந்த இரு அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.