கொழும்பு

லங்கையில் கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களுக்குக் கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது.   இதுவரை சுமார் 9000 பேர் வரை மரணம் அடைந்துள்ளனர்.  சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  அங்கு சுமார் 3000 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இலங்கையிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது.   அங்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.  அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவால் இலங்கையில் வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளன.   இதனால் இலங்கை அதிபர் கொத்தபாய ராஜபக்சே இன்னும் ஆறு மாதங்களுக்குக் கடன் தொகை மற்றும் வட்டி வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு உத்தரவு இட்டுள்ளார்.