வாஷிங்டன்
அமெரிக்காவில் சென்ற வாரம் பணியற்றோர் நிவாரணத்துக்காக 66.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இங்கு சுமார் 1.25 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிபர் டிரம்ப் நாடெங்கும் முழு அடைப்பை அறிவித்துள்ளார். இதனால் பலர் பணி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலா அடியோடு நின்று போனதால் விடுதிகள், சுற்றுலா தொடர்பான பணிகள் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் பணியற்றோருக்கு நிவாரண நிதி அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த நிவாரணத்துக்காக 66.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாகும். இந்த நிவாரணத்துக்காகச் சென்ற வருடம் இதே காலகட்டத்தில் சுமார் 2.11 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கு முன்பு இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்காவில் பலர் பணி இழந்துள்ள போதிலும் அது இந்த எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிகவும் குறைவு என கூறப்படுகிறது. தற்போது ஒரே வாரத்தில் பென்சில்வேன்யா மாநிலத்தில் 362,012 பேரும் ஒகியோ மாநிலத்தில் 189,263 பேரும், மாசசூசெட்ஸ் மாநிலத்தில் 1, 41,003 பேரும், டெக்ஸாஸ் மாநிலத்தில் 139,250 பேரும் கலிபோர்னியாவில் 128,727 பேரும் அதிகரித்துளனர்.