டில்லி

கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடக் குடியரசு தின விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள்  யாரும் வரப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் குடியரசு தின அணிவகுப்பு விழா டில்லியில் விமரிசையாக நடப்பது வழக்கம்.  அதைப் போல் ஒவ்வொரு வருடமும் ஒரு வெளிநாட்டுத் தலைவர் இந்த விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தருவது வழக்கமாகும்.

தற்போது கொரோனா பரவல் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.  உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதுவரை இங்கு 1.05 கோடி பேர் பாதிக்கப்பட்டு 1.51 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2.10 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி குடியரசு தின விழா கொண்டாட்டங்களுக்குச் சிறப்பு விருந்தினராக எந்த நாட்டு தலைவரும் அழைக்கப்படவில்லை.  தற்போதுள்ள கொரோனா சூழ்நிலை காரணமாக இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.