ஜம்மு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜம்முவில் உள்ள அமர்நாத் குகைக் கோவில் மிகவும் பிரபலமானதாகும்.
இங்குள்ள குகைக் கோவிலில் தோன்றும் பனி லிங்கத்தைத் தரிசிக்க லட்சக்கணக்கானோர் உலகெங்கும் இருந்து வருவது வழக்கமாகும்.
வருடத்தில் சுமார் 2 மாதம் மட்டுமே இந்த தரிசனத்துக்கு அனுமதி வழங்குவது வழக்கமாகும்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 23 தொடங்கி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் கொரோனா பரவுதல் அச்சம் காரணமாக அமர்நாத் யாத்திரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது