நியூயார்க்:
அணு ஆயுதப்போர் ஏற்பட்டு உலகம் அழிவை நோக்கி பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்கள் செயல்பாடுகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று அழைக்கப்படும் டூம்ஸ்டே கிளாக் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 1947-ம் ஆண்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழிகாலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டது. தற்போது இது 2 நிமிடங்கள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிகாரத்தில் தென்சீனக் கடல் பற்றிய பதற்றம், இந்தியா&பாகிஸ்தா இடையே மோதல், பவருநிலை மாற்றம் ஆகியவை அடங்கும். வடகொரியாவின் அணு ஆயுத சோதனை அமெரிக்காவை எரிச்சலடைய செய்துள்ளது.
இதனால் உலகம் அணு ஆயுத போரால் அழிவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகச்சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை அறிவியலாளர்கள் மாற்றியமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.