துபாய் :
துபாய் உலக வர்த்தக மையம் இப்போது மத்திய கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
3000-க்கும் மேற்பட்ட படுகைகள் கொண்ட இந்த தற்காலிக ‘கள’ மருத்துவமனையில், தீவிர சிகிச்சைக்கென 800 படுக்கைகள் கொண்ட தனி பிரிவும் உள்ளது. வர்த்தக மையத்தில் உள்ள ஒவ்வொரு கண்காட்சி அரங்கிலும் நோயாளிகளுக்கான படுக்கைகள் போடப்பட்டுள்ளன.
COVID-19 நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் பட்சத்தில், அதிக எண்ணிக்கையிலான படுக்கைகள் தேவையை சமாளிக்கவே இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது.
இது துபாயில் உள்ள இரண்டு தற்காலிக கள மருத்துவமனைகளில் ஒன்றாகும். தேவைப்பட்டால், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கு வேலை செய்வார்கள்.
இது குறித்து கூறிய, துபாய் உலக வர்த்தக மைய, பொறியியல் இயக்குநர், அலி அப்துல்காதர்,
“நாங்கள் ஒரு தற்காலிக கள மருத்துவமனையை உருவாக்க விரும்புகிறோம், ஒவ்வொரு அரங்கிலும் 300 முதல் 500 நோயாளிகளுக்கு படுக்கைவசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப்போது எங்களிடம் துபாய் உலக வர்த்தக மையத்தில் 3030 படுக்கைகள் மொத்த கொள்ளளவு உள்ளது.
நிச்சயமாக, இது இந்த நேரத்தில் நமக்குத் தேவையான ஒன்று அல்ல, ஆனால் திடீரென தேவைப்படும்போது தயாராக இல்லாததை விட, தயாராக இருந்து யாரும் வராமல் இருந்தால் அதுவே நல்லது.
இது எங்கள் நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, எந்த நேரத்திலும் வேறு எங்கிருந்தாவது மக்களை இங்கு அழைத்து வந்தாலும் இந்த மருத்துவமனை பயன்படும் என்பதாலேயே இதனை அமைத்துவருகிறோம்” என்று கூறினார்.
இது தொடர்பான வீடியோ இணைப்பு :