துபாய் தொழிலாளர்களைத் தனி விமானத்தில் அனுப்பும்  ஓட்டல் முதலாளி..

துபாயில் உள்ள  ‘பார்ஷன் குரூப் ஆஃப் ஓட்டல்ஸ்’’ உரிமையாளர் பிரவீன் ஷெட்டி, தனது ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.

அந்த ஓட்டலில் வேலை பார்க்கும் அனைவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

சிலர் குடும்பத்துடன் தங்கி இருந்தனர்.

கொரோனாவால், அவரது ஓட்டல் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர்.

அவர்கள், சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினர்.

இதையடுத்து தனது சொந்த செலவில், ஸ்பைஸ்ஜெட் விமானத்தை வாடகைக்கு அமர்த்தி, தனது தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் என மொத்தம் 177 பேரை, துபாயில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

177 பேரையும் ஏற்றிக்கொண்டு அந்த தனி விமானம், நாளை மங்களூரு சர்வதேச விமானநிலையம் வந்து சேர்கிறது.

அவர்களை , தனிமைப்படுத்த , உடுப்பி உள்ளிட்ட இடங்களில் மூன்று ஓட்டல்களையும் பதிவு செய்துள்ளார், பிரவீன் ஷெட்டி.

தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தையும் கொடுத்துள்ள ஷெட்டி, கொரோனா முடிவுக்கு வந்ததும், எப்போது வேண்டுமானாலும், வேலையில் சேரலாம் என்றும் கூறியுள்ளார்.