துபாய்: மதுக்கடைகள் மூடலால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், ஆன்லைன் சேவை முறையில், மதுவை வீட்டிற்கே நேரடியாக கொண்டுவந்து சப்ளை செய்யும் முறை துபாயில் துவக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான துபாய், ஒரு சர்வதேச வணிக நகரமாகும். இங்கு மதுக்கூடங்கள் நிறைய உண்டு. மது விற்பனையின் மூலம் அரசுக்கு பெருமளவில் வருவாய் குவிந்து வருகிறது.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், துபாயில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இதை சமாளிக்கும் வகையில், ‘ஆன்லைன்’ முறையில் மது வகைகளை, சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் சேவையை, அந்நாட்டு துபாய் அரசு துவக்கியுள்ளது.

www.legalhomedelivery.com என்ற இணையதள முகவரி மூலம் மது வகைகளுக்கான முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.