காஷ்மீர் : மசூதி அருகே டி எஸ் பி அடித்துக் கொலை

ஸ்ரீநகர்

ஸ்ரீநகரில் நொவோட்டா பகுதியில் உள்ள ஜாமியா மசூதி அருகே டி எஸ் பி ஒருவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது.

நொவோட்டா பகுதியில் உள்ளது ஜாமியா மசூதி,   அங்கு கல்லெறியும் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.   அப்போது அங்கு வந்த டி எஸ் பி முகமது அயூப் பண்டிட் அந்த சம்பவத்தை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளார்.  அவர் அப்போது யூனிஃபார்ம் அணிந்திருக்கவில்லை.

கல்லெறியாளர்கள் அவர் படம் எடுப்பதைக் கண்டு அதை தடுத்ததோடு அவரை தாக்க ஆரம்பித்தனர்.  அயூப் தன்னை பாதுகாத்துக் கொள்ள தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து மூன்று முறை சுட்டிருக்கிறார்.

கூட்டம் கலையும் என நினத்த அவருக்கு அதிர்வூட்டும் வகையில் அவரை சூழ்ந்து துப்பாக்கியை பிடுங்கிய கூட்டத்தினர் அவரை நிர்வாணமாக்கியுள்ளனர்.  பின் அனைவரும் சூழ்ந்து அவரைக் கல்லால் அடித்து தாக்கியதில் அங்கேயே அயூப் மரணமடந்தார்.

கல்லெறி சம்பவத்தை கட்டுப்படுத்த அப்போது அங்கு வந்த போலீசார், அவரை மீட்டனர்.  ஆனால் அதற்குள் அவர் மரணம் அடைந்தார்.  யூனிஃபார்ம் இல்லாததால் போலீசார் அவரை அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை.   அப்போது அவரது வீட்டில் இருந்து அவரை மொபைலில் அழைக்க, அந்த அழைப்பை ஏற்று பேசிய பின்னரே அவரின் அடையாளம் தெரிந்தது.

அடையாளம் காணுதல் மற்றுமுள்ள சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்காக அவருடைய உடல் கண்ட்ரோல் ரூமுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  அவருடைய மறைவுக்கு அனைத்து அதிகாரிகளும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்

அந்த பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டது.

 


English Summary
DSP was beaten to death near masjid at Kashmir