சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் எனத் தெரிவித்துள்ளது.

நேற்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் 4. 5 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வ பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 6, 7-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

வரும் 4, 5 தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.  தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இம்மாதம் 3-ம் தேதி காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 10 செமீ, பாம்பன், மண்டபம், தங்கச்சி மடம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழைப் பதிவாகியுள்ளது.

இன்று அதாவது 4-ம் தேதி குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். ஆகவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.