லண்டனிலிருந்து துருக்கி சென்ற விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவருக்கும், செல்ம்ஸ்ஃபோர்டு நீதிமன்றம், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் இருந்து துருக்கி சென்ற ஜெட்ஸ்டார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் சோலி ஹெய்ன்ஸ் என்ற பெண்மணி பயணம் செய்தார். மது போதையில் இருந்த வர பைலட் அறைக்கு நுழைய முயற்சி செய்தார்.
பின்னர் விமான பயணிகளை பார்த்து நீங்கள் அனைவரும் சாக போகிறீர்கள் என்று மிரட்டல் விடுக்க தொடங்கினார். இதுமட்டுமின்றி விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்துள்ளார்.
இவரது செயலை பார்த்து பயந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களிடம் அவரை தடுக்கமாறு கேட்டு கொண்டனர். இதையடுத்து விமான ஊழியர்கள் அந்த பெண்ணை பிடிக்க முயன்றனர். தன்னை பிடிக்க வந்த விமான ஊழியர்களை அந்த பெண் சரமாரியாக தாக்கினார். இந்த பெண்ணின் செய்கை விமானிக்கு சந்தேகம் உண்டானது. இதையடுத்து விமான பைலட் விமான நிறுவனத்துக்கு தகவல் அளித்தார்.
இந்த தகவலை கேட்ட விமான நிறுவனம் தங்கள் நிறுவன விமான கடத்தப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில், பாதுகாப்புகாக இரண்டு போர் விமானங்களை அனுப்பியது. இருந்தபோதிலும் , விமானத்தை மீண்டும் லண்டனுக்கு வரவழைத்த அந்த நிறுவனம், ரகளையில் ஈடுபட்ட பெண் பயணியை கைது செய்து விமானத்தை விட்டு வெளியேற்றியது.
நீங்கள் அனைவரும் சாக போகிறீர்கள் என்று மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டதை அடுத்து, அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் நிம்மதியாக பயணத்தை தொடர்ந்தனர்.