சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக  போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க அரசை வலியுறுத்தியும்,   மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திமுக கூட்டணி கட்சியான மதிமுக பொதுசெயலாளர் வைகோ  தமிழக அரசுக்கு எதிராக 10 நாட்கள்  நடைபயணம் அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதனால் அதிகரித்து வரும் சட்டவிரோத செயல்கள் போன்றவைற்றை தடுக்க வலியுறுத்தியும்,  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடை பயணம் 2026ம் ஆண்டு ஜன. 2-ம் தேதி  தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்,  போதைப் பொருள் பயன்பாட்டை எதிர்த்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம்  பேசிய வைகோ,   லட்​சக்​கணக்​கான வாக்​காளர்​களின் வாக்​குரிமை​யைப் பறிக்​கும் முயற்சிக்கு எதிராக நவ.11-ல் அனைத்து மாவட்​டத் தலைநகரங்​களி​லும் நடைபெறும் கண்டன ஆர்ப்​பாட்​டத்தில், மதி​முக பெரு​மளவில் பங்​கேற்​கும் என கூறியதுடன், தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் போதைபொருள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், போதைப் பொருளுக்கு எதிராக ஜன.2-ம்தேதி திருச்​சி​யில் இருந்து நடைபயண​மாக புறப்​பட்டு மணப்​பாறை, திண்​டுக்​கல் வழி​யாக ஜன.12-ம் தேதி மதுரையை அடைந்து எங்​களது பயணத்தை நிறைவு செய்ய திட்​ட​மிட்​டுள்​ளோம் என்றார்.

வைகோவின் இந்த நடைபயணம், திமுக அரசுக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது. இது கூட்டணி கட்சிகளிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொடிகட்டி பறக்கும் போதைபொருள் விற்பனை! வடசென்னையில் 5 பேர் கைது!

போதைபொருள் விற்பனை: கைது செய்யப்பட்ட ரவுடிகளை விடுவிக்கக்கோரி ரவுடி கும்பல் மருத்துவமனைமீது தாக்குதல்! இது சென்னை சம்பவம்…

போதைபொருள் நடமாட்டம் அதிகரிப்பு: வழக்குகளை சிபிஐக்கு மாற்றப்போவதாக நீதிமன்றம் எச்சரிக்கை…

https://patrikai.com/selling-drugs-through-the-reddit-app-5-engineering-students-arrested-in-chennai/