ஜகார்தா:
 இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில்  4 பேருக்கு நேற்று மரண  தண்டனை   நிறைவேற்றப்பட்டது.
பொதுமக்களை சீரழிக்கும் போதை பொருளுக்கு இந்தோனேசியாவில் தடை உள்ளது. அதை மீறி போதை பொருள் விற்பதோ, கடத்துவதோ தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிகை எடுக்க  இந்தோனேசியா அதிபர் ஜோகோ ஜுடோடோ உத்தரவிட்டு உள்ளார்.  இந்த விஷயத்தில் பாரபட்சமே கிடையாது.

2004-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து இந்தோனேசியாவுக்கு ஹெராயின் போதை பொருள் கடத்திச்செல்ல முயன்ற பஞ்சாபை சேர்ந்த் குர்தீப்சிங் என்பவர் இந்தோனேசியாவில் உள்ள சோகர்ணோ ஹட்டா விமான நிலையத்ததில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் ஹெராயின் கடத்தி வந்தது உறுதியான நிலையில் அவருக்கு 2005ம் ஆண்டே மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
அதேபோல் போதை பொருள் கடத்த உடந்தையாக இருந்த இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர், பாகிஸ்தானை சேர்ந்த் ஜூல்பிகர் அலி என்பவர், நைஜிரியாவை சேர்ந்த 8 பேர் ஆகியோருக்கும் இந்தோனேசிய அரசு மரண தண்டனை வழங்கியிருந்தது.
இந்தோனேசிய அரசின்  மரண தண்டனைக்கு ஐ.நா.,சபை மற்றும் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்திய அரசும், தூதரகம் மூலம் குர்தீப்சிங்கை விடுதலை செய்ய முயற்சி செய்து வருகிறது.
இதற்கிடையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 14 பேரும் திடீரென  ஜவா தீவில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.   நேற்று அவர்களில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
மற்ற 8 பேருக்கும் தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற தகவல் இல்லை.
ஆனால் இறந்தவர்களின்  உடல்களை எடுத்து வருவதற்காக 14  சவப்பெட்டிகள் சிறையில் தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.