சென்னை
நேற்று பூந்தமல்லி – போரூர் இடையே நடந்த ஓட்டிநர் இல்லா மெட்ரோ ரயீல் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது/

இந்த ஆண்டின் (2025) இறுதிக்குள் சென்னையில் உள்ள பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி இதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கவும், மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
பூந்தமல்லி – போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை நேற்று (28.04.2025) நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சோதனையின் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது