பனை மரத்தில் இருந்து தயார் செய்யப்படும் கள் என்ற போதை பானத்தில், கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 600 கிலோ அல்பிரஸோலம் என்ற ரசாயண பொருளை பறிமுதல் செய்துள்ளனர் தெலங்கான வருவாய் புலனாய்வு அமைப்பினர்.
பொதுமக்கள் அருந்தும் போதைபொருளான ‘கள்’ளில் ரசாயணம் கலக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட அல்பிரஸோலம் என்ற ரசாயண விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.
தெலங்கானாவில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள அல்பிரஸோலம் பறிமுதல் செய்யப்பட்டது.
தெலங்கானாவில், மேடக் மற்றும் நல்கொண்டா மாவட்டங்களில் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட அல்பிரஸோலம் என்ற ரசாயணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர் வருவாய் புலனாய்வு அமைப்பினர்.
அவர்களிடம் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்ட ரசாயணம் செய்யப்பட்டன.
இந்த ரசாயண பொருளை குற்றவாளிகள் தயார் செய்து, மேடக் மாவட்டத்தின் நர்சாபூரில் ஒரு கொட்டகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் அது பேஷ்செர்ருவுக்கு அருகில் உள்ள இஸன்பூரில் அமைந்துள்ள விருந்தினர் இல்லத்தில் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது என்றும் புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இநத அல்பிரஸோலம் என ரசாயண பொருள், ஒரு மனோவியல் பொருள் ஆகும். இதை அதிகமாக உபயோகப்படுத்தினால் நரம்புகளுக்கு கேடு விளைத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்..
இந்த அல்பிரஸோலம் ரசாயண பொருள், தெலங்கான மாவட்டத்தில், பனையில் இருந்த தயாரிக்கப்படும் கள்ளில் கலப்படம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை காரணமாக அல்பிரஸோலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்த சசிதருரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் பல சந்தேகங்களை எழுப்பியிருந்த நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், இந்த அல்பிரஸோலம் என்ற ரசாயண மருத்து அவருக்கு ஊசி மூலமோ அல்லது வாய் வழியாகவோ கொடுக்கப்பட்டு மரணித்திருக்கலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.